முகம் எப்படி சரியானது என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ரைசா பதில் அளித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இதை தொடர்ந்து படங்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் இவர் சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கிறார்.
இதற்கிடையில் கடந்த மாதம் தோல் சிகிச்சைக்காக மருத்துவரிடம் சென்றபோது அவருக்கு முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது குறித்து பதிவு செய்திருந்தார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக எழுந்தது. இந்நிலையில் தனது முகத்தை சரிசெய்து அழகான புகைப்படம் ஒன்றை எடுத்து ரைசா பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எப்படி உங்களது முகம் சரியானது என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் நடிகை ரைசா தனது முகத்தில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய புதிய கிளினிக் ஒன்றில் 5 வாரம் சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் அதன் மூலம் தன் முகம் சரியானதாகவும் தெரிவித்துள்ளார்.