Categories
மாநில செய்திகள்

ஒரு பெண் தன் வாழ்நாளில் எத்தனை முறை கருதானம் செய்யலாம்….? ரிப்போர்ட் கேட்கும் ஐகோர்ட்….!!!!!

இந்தியாவில் கடந்த 2021-ம் ஆண்டு கருத்தரித்தலை முறைப்படுத்துவதற்காக இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்த்து கருமுட்டை வழங்கக்கூடிய பெண்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் சட்டத்தின்படி கருமுட்டைகளை அதற்கான வங்கிகளின் இருந்து பெறவேண்டும் என்றும், 23 வயது முதல் 35 வயதுகுட்பட்ட பெண்கள் தங்களுடைய ஆயுட்காலத்தில் ஒருமுறை மட்டுமே கருதானம் பெற வேண்டும் எனவும் இருக்கிறது.

அதன் பிறகு ஒரு தம்பதிகளுக்கு ஒரு முறைக்கு மேல் கருமுட்டை மற்றும் விந்தணுக்களை வழங்கக்கூடாது எனவும் சட்டத்தில் இருக்கிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆய்வுகளின் படி ஒருபெண்மணி 6 முறை கருதானம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தில் இருப்பது மருத்துவ ரீதியாக சாத்தியமற்றது என்றும் கூறப்படுகிறது. அதோடு சட்டம் அமலுக்கு வந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை கருமுட்டைகள் வழங்கும் வங்கிகளும் அமைக்கப்படவில்லை. இந்த சட்டம் குழந்தையில்லா தம்பதியினர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமையை பறித்துக் கொள்வது போன்று இருக்கிறது.

எனவே இந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டு கருமுட்டை வங்கி அமைக்கப்படும் வரை வழக்கம் போல் கருமுட்டை தானம் பெறலாம் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதோடு ஒரு தம்பதிக்கு 6 முறை கருதானம்‌ பெறவும் அனுமதி கொடுக்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் வந்த போது ஒரு பெண்மணி  6 முறை கருதானம்  பெறலாம் என்பதற்கு என்ன அறிவியல் ரீதியான சாத்திய கூறுகள் இருக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மனுதாரர்கள் இதை நிரூபிக்க கால அவகாசம் கேட்டதால் அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஜனவரி 3-ம் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.

Categories

Tech |