தமிழகத்தில் இன்று மட்டும் 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,14,978 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,793-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 66,571-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 33,518 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக 13,16,937 பேருக்கு கொரோனா மாதிரி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் 46,833 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 61 பேர் உயிரிழந்தால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1571ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 1,747 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதுவரை 70,017 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 24,052ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் குணமடைந்தோர் வீதம் 57.90 %ஆக உள்ளது. தமிழகத்தில் இன்று வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்த 44 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு:
அரியலூர் – 475
செங்கல்பட்டு – 6,853
சென்னை – 70,017
கோயம்புத்தூர் – 802
கடலூர் – 1,277
தர்மபுரி – 128
திண்டுக்கல் – 725
ஈரோடு – 288
கள்ளக்குறிச்சி – 1246
காஞ்சிபுரம் – 2,729
கன்னியாகுமரி – 638
கரூர் – 170
கிருஷ்ணகிரி – 200
மதுரை – 4,338
நாகப்பட்டினம் – 310
நாமக்கல் – 113
நீலகிரி – 150
பெரம்பலூர் – 170
புதுக்கோட்டை – 375
ராமநாதபுரம் – 1454
ராணிப்பேட்டை – 1,193
சேலம் – 1,288
சிவகங்கை – 564
தென்காசி – 468
தஞ்சாவூர் – 499
தேனி – 1128
திருப்பத்தூர் – 282
திருவள்ளூர் – 4,983
திருவண்ணாமலை – 2534
திருவாரூர் – 553
தூத்துக்குடி – 1,271
திருநெல்வேலி – 1,114
திருப்பூர் – 220
திருச்சி – 1004
வேலூர் – 1980
விழுப்புரம் – 1,231
விருதுநகர் – 975