தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது, படகுகள் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவது போன்றவை எல்லாம் தொடர்கதையாகவும், துயர் கதையாகவும் நடந்து வரக்கூடிய சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் சார்பாக ஒரு மனு ரிட் மனு என்பது தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கின்றது.
இந்த சூழலில் இன்று வழக்கு மூன்றாவது வழக்காக இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சூழலில், மத்திய அரசு சார்பாக கூடுதல் கால அவகாசம் என்பது கேட்கப்பட்டது. மத்திய அரசு சார்பில் அறிக்கையை தாக்கல் செய்வதற்கு, உச்சநீதிமன்ற நோட்டீஸுக்கு பதிலளிக்க கூடுதல் கால அவகாசம் என்பது கேட்கப்பட்டது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,
மீனவர்கள் ஏராளமானோர் தொடர்ந்து கைது செய்யப்படுவது என்பது நடந்து வருகிறது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற வாதத்தை முன் வைத்தார். அப்பொழுது பேசிய நீதிபதிகள், இன்னும் எத்தனை காலத்துக்கு தான் இப்படி துயர் விஷயங்களை மீனவர்கள் அனுபவித்து வருவார்கள். இதில் மத்திய அரசு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறீர்கள் என்ற ஒரு கேள்வியையும் எழுப்பினார்.
இது இரண்டு நாடுகளுக்கு இடையான ராஜாங்க விவகாரம் என்பதன் காரணமாக ரிட் மணுக்கள் மூலமாக இந்த விஷயங்களை எல்லாம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. இது இரண்டு நாடுகள் சம்பந்தப்பட்ட விஷயம். வெளியுறவு கொள்கை உள்ளிட்ட விஷயங்கள் மூலமாக நாங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம் போன்றவை எல்லாம் சொல்லப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்ட துறையிடம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது என்பது குறித்த விவரங்களை எல்லாம் அறிக்கையாக தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதனை அடுத்து அக்டோபர் மாதத்திற்கு இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.