மேஷம் ராசி அன்பர்களே ..!!! இன்று எவரிடமும் உயர்வு, தாழ்வு கருதாமல் பழகுவீர்கள். சிறு செயலும் நேர்த்தியாக அமைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்பு உருவாகும். உபரி பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்று இஸ்ட தெய்வ வழிபாடு பலன் அளிக்கும்.
எல்லா நன்மைகள் உங்களுக்கு கிடைக்கும். காரியத்தில் வெற்றி ஏற்படும், எதிர்ப்புகள் விலகி செல்லும், எந்த ஒரு வேலையிலும் ஈடுபடும் முன்பு அதனால் ஏற்படும் நல்லது கெட்டது பற்றி ஆராய்ந்த பின்னர் கொஞ்சம் செய்யுங்கள், வீண் அலைச்சல் உங்களுக்கு குறையும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் சிவப்பு
ரிஷப ராசி அன்பர்களே..!!!! சிலரது பேச்சு மனதை பாதிக்கலாம். முன் யோசனையுடன் நடந்து கொள்வதால் தேவையற்ற சிரமம் அணுகாமல் தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்றுவது நல்லது. அன்றாட செலவுக்கு கூடுதல் பணம் தேவைப்படும். இன்று பிள்ளைகளின் செயல்பாடுகள் மனசுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும்.
உறவினர்களிடம் பக்குவமாக பேசுவது நல்லது. வழக்குகளில் மெத்தனமான போக்கு காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும், பயணங்களால் அலைச்சல் இருக்கும். மனதில் ஒருவித கவலை வந்து செல்லும், எதை பற்றியும் குழம்பி கொள்ளாமல் காரியத்தை மட்டும் தெளிவாகச் செய்யுங்கள் அது போதும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம்சிவப்பு
மிதுன ராசி அன்பர்களே…!!!! இன்று இஷ்ட தெய்வ அருள் பலம் துணை நின்று உதவும். தொழில் வியாபாரத்தில் அபரிதமான வளர்ச்சி ஏற்படும். பணவரவு நன்மையை கொடுக்கும். வீட்டில் ஒற்றுமை, மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று முயற்சியின் பேரில் தான் முன்னேற வேண்டியிருக்கும். நீண்ட தூர பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும், பயணத்தின் போது ரொம்ப கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கே காணப்படும். வியாபாரப் போட்டிகள் இருந்தாலும், அதனால் பாதிப்பு ஏதும் இருக்காது.
இன்று தனவரவு கொஞ்சம் தாமதப்பட்டு வந்து சேரும், பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் பணவரவை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை.இன்று குடும்பத்தாருடன் வெளிஊருக்கு சென்று பொழுதைக் கழிப்பதற்காண சூழல் இருக்கிறது. இன்று தெய்விக நம்பிக்கையும் உங்களுக்கு துணை நிற்கும்.
முக்கியமான பணியை நீங்கள் இன்று மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று காக்கைக்கு எள் கலந்த சாதத்தை அன்னமாக கொடுங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு
கடகம் ராசி அன்பர்களே…!!!! இன்று மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். இஷ்ட தெய்வ அருளால் வாழ்வில் நடைமுறை சீராகும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். இன்று டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் பிரச்சினை கல்வியில் தடை போன்றவை விலகிச்செல்லும்.
எதிலும் நன்மை ஏற்படும். இன்று கலை இயக்கத்தின் மீது ஆர்வம் அதிகரிக்கும். இன்றைய நாள் பொன்னான நாளாகவே உங்களுக்கு அமையும்.தனவரவை பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை, வந்து சேரும் இன்று வெளியிடங்களுக்குச் சென்று பொழுதைக் கழிப்பதற்காக சூழல் இருக்கும் மனம் மகிழ்வாகவே காணப்படும்.
முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை :மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்:இளம் சிவப்பு மற்றும் நீலம்
சிம்மம் ராசி அன்பர்களே…!!!! இன்று செயல் நிறைவேறுவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இருக்கும். சேமிப்பு பணம் குடும்ப செலவுகளுக்கு பயன்படும், பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்ட திட்டங்களை தவறாமல் பின்பற்றவும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது ரொம்ப நல்லது. கூடுமானவரை இன்று சாந்தமாக இருங்கள், அமைதியாக இருங்கள், தெய்வத்தை வணங்குங்கள்.
இன்று தனவரவை பொருத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை, ஓரளவு சிறப்பாக இருக்கும். செலவை மட்டும் நீங்கள் தயவுசெய்து இன்று கட்டுப்படுத்தி தான் ஆகவேண்டும். கூடுமானவரை செலவைக் கட்டுப்படுத்தி விடுங்கள். இன்று பிள்ளைகளுக்காக முக்கிய செலவை நீங்கள் செய்ய வேண்டியிருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு கொடுங்கள், வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீலம்
கன்னி ராசி அன்பர்கள…!!!! இன்று தவிர்க்க இயலாத பணி குறுக்கிடலாம். நண்பரின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறுவதற்கு சில மாற்றங்கள் தேவைப்படும். அளவான பண வரவு இன்று கிடைக்கும். தியானம், தெய்வ வழிபாடு, மனம் அமைதி பெற உதவும். இன்று எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்ல படியாகவே நடக்கும். கவலை வேண்டாம். மனதில் எதைப் பற்றியாவது சிந்தித்த வண்ணம் இருந்து கொண்டே இருப்பீர்கள்.
இன்று சீரான போக்கு அனைத்து விஷயங்களிலும் காணப்படும். கூடுமானவரை நீங்கள் முயற்சியின் பேரிலே சில காரியங்கள் வெற்றிகரமாக செய்ய முடியும். இன்று மற்றவர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும், மற்றவர்களுக்கு நீங்கள் உதவிகளை மேற்கொள்வீர்கள். செலவை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், பணத்தேவைக்காக இன்று யாரிடமும் கடன் வாங்க வேண்டாம், பார்த்துக்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று சிறிய வேலைக்கும் அதிக முயற்சி தேவைப்படும். இனிய அணுகுமுறையால் நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உள்ள மந்த நிலையை சரி செய்வது நல்லது. புதிய இனங்களில் செலவு கொஞ்சம் கூடும். தாயின் ஆறுதல் வார்த்தை மனதிற்கு நம்பிக்கை கொடுக்கும்.
இன்று தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும். அனைத்து விஷயத்திலும் சாதகமான பலன்கள் காணப்படும். இன்று தான தர்மம் செய்யவும் ஆன்மீக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாகத்தான் இருப்பீர்கள். செலவை மட்டும் கட்டு படுத்திக் கொள்ளுங்கள் அது போதும். வாகனத்தில் செல்லும்போது பொறுமையாகவே செல்லுங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறம் ஆடை அணிந்து செல்லுங்கள். அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷத்தை நீக்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் சிவப்பு
விருச்சிகம் ராசி அன்பர்களே…!! இன்று பேச்சில் மங்கள தன்மை நிறைந்திருக்கும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். வீட்டில் உபயோக பொருட்களை வாங்க கூடும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள்.இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம், சிலருக்கு உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படலாம்.
குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் இருக்கும், கணவன் மனைவிக்கு இடையே திடீர் மனவருத்தம் ஏற்படும். இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாக அமையும். கூடுமானவரை வாக்கு வாதத்தை மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். அது மட்டுமில்லாமல் மனைவியிடம் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். எந்த ஒரு பிரச்சனையையும் பேசி தீர்த்துக்கொள்வது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறம் ஆடை அணிந்து செல்லுங்கள் அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷத்தை நீக்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண்: 3 மற்றும் 4
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை
தனுசு ராசி அன்பர்களே..!! இனிய அணுகுமுறையால் வாழ்வில் கூடுதல் நல்ல பலனை நீங்கள் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் உற்பத்தி விற்பனை அளவு சிறப்பாக இருக்கும். உபரி பண வரவில் சேமிப்பு உயரும். இஷ்டதெய்வ வழிபாட்டை நிறைவு செய்வீர்கள். இன்று தடைகளை தாண்டி நீங்கள் முன்னேறி செல்வீர்கள். செய்யும் முயற்சி எல்லாம் வெற்றியை கொடுக்கும். சிறப்பான முன்னேற்றத்தை பெறக்கூடும்.
வேலையில் இழுபறி எரிச்சல் போன்றவை இருக்கும். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். உடல்நிலையிலும் கொஞ்சம் கவனித்து கொள்ளுங்கள். சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள். மற்றவரிடம் பேசும்போது நிதானத்தை மேற்கொள்ளுங்கள். எந்த வித பிரச்னையும் வேண்டாம். தயவுசெய்து வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் உங்களுக்கு சீராக தான் இருக்கும். இருந்தாலும் உங்களுடைய தேவைகளுக்காக மற்றவர்களிடம் நீங்கள் எந்தவித பிரச்சினைகளை செய்ய வேண்டாம், அதை மட்டும் புரிந்து கொண்டு நடந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறம் ஆடை அணிந்து செல்லுங்கள் அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷத்தை நீக்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 6
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் இளம் மஞ்சள்.
மகரம் ராசி அன்பர்களே..!! வாழ்வில் வளர்ச்சி பெற புதிய வாய்ப்புகளைப் தேடுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உதவிகளை செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய பரிமாணம் ஏற்படும். பண பரிவர்த்தனையில் முன்னேற்றம் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவி கிடைக்கக் கூடிய அனுகூலம் உருவாகும்.
இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடங்கல்கள் கொஞ்சம் ஏற்படும். தேவையற்ற மனக் கவலை கூட கொஞ்சம் இருக்கும். வழக்கு விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செய்யலாம்.
வெளியூர் பயணம் செல்ல நேரும்போது உடமைகளில் ரொம்ப கவனமாக இருங்கள். அலைச்சல் தரும் வேலைகளில் தயவுசெய்து கவனம் செலுத்த வேண்டாம். கூடுமானவரை உடலை நீங்கள் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பழகிக் கொள்ளுங்கள். அது மட்டும் இல்லாமல் சரியான நேரத்தில் உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறம் ஆடை அணிந்து செல்லுங்கள் அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷத்தை நீக்கி செல்வா செழிப்பை ஏற்படுத்தும்.
அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண்: 6 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் பச்சை
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகளை மனதில் நிறுத்தி செய்வீர்கள். நண்பரின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும். பணவரவை சிக்கனமாக செலவு செய்வீர்கள். வீடு வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பழி ஏற்பட வாய்ப்பு இருக்கும். எதிர்பாராத செலவு கொஞ்சம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும், பிள்ளைகளின் செயல்பாடுகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
ஆயுதங்களை பயன்படுத்தும் போது ரொம்ப கவனமாக செயல்படுங்கள்,யாரிடமும் இன்று பண தேவைக்காக கடன் மட்டும் வாங்க வேண்டாம் பார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டும் இல்லாமல் கணவன் மனைவிக்கு இடையே எதிர்பாராத வகையில் வாக்குவாதங்கள் வரக்கூடும். கூடுமானவரை வாக்குவாதங்கள் வந்தால் தயவு செய்து நீங்கள் ஒதுங்கிச் சென்று விடுவது ரொம்ப நல்லது இதை மட்டும் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது பச்சை நிறம் ஆடை அணிந்து செல்லுங்கள் அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷத்தை நீக்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை.
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் இனம் புரியாத குழப்பம் கொஞ்சம் வரலாம். நலம் விரும்புவோரின் ஆலோசனை நல்வழி கொடுக்கும். தொழில் வியாபாரம் சராசரி அளவில் இயங்கும். தவிர்க்க இயலாத செலவில் சிக்கனத்தை பின்பற்றுவீர்கள். நீண்ட தூர வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது. இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கல்கள் கொஞ்சம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். எதுவுமே மாலை நேரத்திற்குப் பிறகு சரியாகும், கவலை வேண்டாம். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் சரியாக முடிவெடுக்க வேண்டும் என்ற கவலை இருக்கும்.
எதை பற்றியும் நீங்கள் எப்பொழுதும் கவலை கொள்ள வேண்டாம். காரியத்தை நீங்கள் செய்வதற்கு மட்டுமே முயற்சி செய்யுங்கள், இறைவன் அருளால் உங்களுக்கு எப்போதுமே நல்லதாகவே நடக்கும். சக ஊழியரிடம் கொஞ்சம் கவனமாக பேசுங்கள். யாரிடமும் கோபபடாமல் வாக்குவாதத்தை கை விட்டாலே போதும். உங்களுடைய வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். அது உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தும்.
அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை.