Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

இன்றைய (02.12.2019) நாள் எப்படி இருக்கு ? முழு ராசி பலன்கள் இதோ..!!

மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று செயல்களில் தற்காப்பு வேண்டும். எவருக்கும் தகுதி மீறிய வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகின்ற குறுக்கீடுகளை உரிய வகையில் சரி செய்ய வேண்டும். இன்று அளவான பணவரவு கிடைக்கும். வெளியூர் பயணத்தில் மாற்றம் இருக்கும். இன்று உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.

இன்று குடும்பத்தில் இருப்பவருடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இன்று கணவன் மனைவி ஒருவருக் கொருவர் அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. பிள்ளைகளின் நலனில் அக்கறை வேண்டும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். பஞ்சாயத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம் அதையும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் முயற்சி செய்து பாடங்களை படிப்பது நல்லது.

கூடுமானவரை பாடத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று திங்கள் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்

ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று தியாக மனதுடன் செயல்படுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை இஷ்ட தெய்வ அருளால் சிறப்பாகவே இருக்கும். இன்று குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல் துறையினருக்கு பதவி கிடைக்க அனுகூலம் உண்டாகும். இன்று தொழில் வியாபாரம் நல்லபடியாகவே நடக்கும். ஆர்டர்கள் வந்து குவியும். சரக்குகளை அனுப்பும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக அனுப்புங்கள்.

பழைய பாக்கிகள் வசூல் ஆகும். ஆனால் எதிர்பார்த்தபடி இருக்காது பார்த்துக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பதவி உயர்வு நிலுவையில் உள்ள பணம் வருவது போன்றவை தாமதப்பட்டு தான் வந்து சேரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடித்து பாராட்டுகள் கிடைக்கும். இன்று தடைகள் விலகி செல்லும் எதிர்ப்புகளும் விலகிச்செல்லும்.

இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் செல்லும். கூடுமானவரை கவனமாக பாடங்களைப் படியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை  மேற்கொள்ளும்போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியங்களைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சங்கடமான சூழ்நிலையும் நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். பொறுமையுடன் செயல்படுவது எதிர்காலத்தில் நன்மை பெற உதவும். தொழில் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதலாகவே பணிபுரிவீர்கள். பணச் செலவில் சிக்கனத்தைக் கடைபிடிப்பீர்கள். இன்று தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். இன்று வீட்டை விட்டு வெளியில் தங்கக் கூடிய சூழல் இருக்கும். உழைப்பு அதிகமாக இருக்கும். கலைப்பு பித்த நோய் போன்றவை ஏற்படக்கூடும். கூடுமானவரை உடலை கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள்.

இன்று வீண் கவலை மனதில் இருக்கும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். இன்று செய்யக்கூடிய காரியங்கள் ஓரளவு நேர்த்தியாக இருக்கும். அரசியல் துறையினருக்கு சந்தோசமான நிலை காணப்படும் மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும்.

சிறப்பாக செயல்படுவார்கள். நல்ல முன்னேற்றமான சூழ்நிலையும் அடையக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடியதாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்

கடகம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் நலம் விரும்புபவரை நீங்கள் சந்திக்க கூடும். அன்றாட பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். கூடுதல் சொத்து வாங்க அனுகூலம் ஏற்படும். இன்று எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உருவாகும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டியிருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் இருக்கட்டும். வீண் செலவுகள் அதிகமாக இருக்கும்.

மற்றவர்களால் கொஞ்சம் மனக்கசம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பு ஏற்காமல் இருப்பது தான் மிகவும் நல்லது. தொழில் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலத்தை கொடுக்கும். முன்னேற்றம் காண்பீர்கள். இன்று எதிர்பார்த்த பதவி உயர்வு போன்ற தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள் அது போதும்.

இன்று மாணவ கண்மணிகள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

சிம்மம் ராசி அன்பர்களே..!! உங்களை சிலர் ஏளனமாக பேசக்கூடும். பணியை நிறைவேற்றுவதில் கவனம் நல்லது. தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு படிப்படியாக நிறைவேறும். முக்கிய செலவுக்காக கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். உணவு உண்பதில் கட்டுப்பாடு நல்லது. இன்று தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் கொஞ்சம் அதிகரிக்கும்.

வாடிக்கையாளர் களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை விலகிச்செல்லும். விளையாட்டுப் போட்டிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

கன்னிராசி அன்பர்களே..!! இன்று நிலுவைப் பணிகளை நிறைவேற்ற புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான உதவிகள் கிடைக்கும். பணப் பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று குடும்பத்தில் ஏதேனும் கொஞ்சம் குழப்பம் ஏற்பட்டால் கூடுமானவரை நீங்கள் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே கருத்துவேற்றுமை வந்து நீங்கும்.

உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மையை கொடுக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுங்கள் அதுபோதும். பயணங்களின்போது உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. தாமதமான காரியங்கள் இன்று வேகம் பிடிக்கும். வீண் கவலை விலகிச்செல்லும். மனம் கொஞ்சம் இன்று ஓரளவு நிம்மதியாகவே காணப்படும்.

இன்று மாணவ கண்மணிகள் மட்டும் கொஞ்சம் கடினமாக உழையுங்கள் அப்பொழுதுதான் பாடங்களை நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும் அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்

துலாம் ராசி அன்பர்களே..!! சிறு செயலையும் இன்று நேர்த்தியுடன் செய்வீர்கள். நண்பர்கள் உங்களை பாராட்ட கூடும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி பெருமளவில் குறையும். இன்று பணவரவும் நன்மையை கொடுக்கும். பணியாளர்களுக்கு பாராட்டும் வெகுமதியும்  கிடைக்கும். இன்று வீண் பேச்சைக் குறைப்பது மட்டும் நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகி செல்லும். பணவரவு திருப்திகரமாக இருக்கும் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும்.

வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வதும் அவசியம். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் நண்பர்களுடன் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. வியாபாரப் போட்டிகள் குறையும். எல்லாத் துறைகளிலுமே லாபம் கிடைக்கும். இன்று பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விளையாட்டு துறையில் வெற்றி வாய்ப்புகள் வந்து குவியும். இன்று முக்கியமான பணியை  நீங்கள்  நிறைவேற்றும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரலாம். முக்கிய பணிகளில் கவனம் அவசியம். தொழில் வியாபாரத்தில் ஆராவாரத்தை தவிர்க்க வேண்டும். பணவரவு குறைந்த அளவில்தான் இன்று கிடைக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றவும். இன்று ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதைச் செய்வதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும். பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது மிகவும் நல்லது. இன்று மற்றவருடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது ரொம்ப நல்லது.

தொழில் வியாபாரம் மந்தமாக காணப் பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். வெளியூர் பயணம் வீண் அலைச்சலை கொடுக்கும். இன்று உழைப்பு அதிகமாக தான் இருக்கும். சரியான நேரத்திற்கு உணவை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்திடுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் இருந்த தடை விலகி நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை அடைவார்கள்.

ஆசிரியர்களிடம் நல்ல பெயரை எடுக்கக்கூடும். சக மாணவர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

தனுசு ராசி அன்பர்களே..!! இன்று உங்களின் செயல் திறனைப் பார்த்து சிலர் பொறாமை படக்கூடும். சொந்த பணியில் கவனம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க மாற்று உபாயத்தை தேடுவீர்கள். சேமிப்பு பணம் செலவாகும். மனைவியின் கருத்து குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம் பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபங்கள் கொஞ்சம் திடீரென்று ஏற்படக்கூடும்.

இன்று கணவன் மனைவிக்கு இடையே சுமூகமான உறவு இருக்கும். விட்டுக்கொடுத்து செல்வது மட்டும் நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். எதிர்பார்த்த காரிய வெற்றியும் உண்டாகும். புத்தி சாதுரியத்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற துணிச்சல் இருக்கும். உங்களுடைய அனுபவ பூர்வமான அறிவுத்திறன் உங்களுக்கு கைக்கொடுக்கும். பணவரவு இன்று தாமதப்பட்டு தான் வந்து சேரும்.

மாணவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து பாடங்களை தெளிவாக படித்து பின்னர் அதை எழுதிப் பார்ப்பது ரொம்ப சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் அடர் நீல நிறம்

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று அதிக உற்சாகமுடன் நீங்கள் செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பணி எளிதாக நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். வெகுநாள் வாங்க விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். இன்று மாணவர்களுக்கு படிப்பில் ஞாபகத்திறன் வளரும். இன்று மனத் துணிவும் அதிகரிக்கும். பணவரவு எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகளும் கிடைக்கும்.

எந்த காரியத்தையும் செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சில தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். புதிய நண்பர்களிடம் பழகும்போது கவனம் இருக்க வேண்டும். மற்றவருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும்.

அந்த பயணம் ஓரளவு வெற்றியையும் மனதிற்கு அலைச்சலையும் கொடுப்பதாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடியதாக தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சமயோசிதமாக செயல்படுவீர்கள். முக்கிய பணிகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். உபரி பண வருமானம் கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று முயற்சிகள் யாவுமே வெற்றிபெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது மட்டும் நல்லது கூடுமானவரை பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.

தொழில் வியாபாரம் நிதானமாக தான் நடக்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆடர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன்களைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை கொஞ்சம் சந்திக்க வேண்டியிருக்கும். அலுவலகப் பணிகள் மூலம் டென்ஷன் ஏற்படும். கவனமாகப் பேசுவது எப்போதுமே நல்லது. இன்றைய நாள் ஓரளவு சிறப்பு இருக்கும். தனவரவு இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் படியுங்கள்.

படித்த பாடத்தை எழுதிப் பாருங்கள். அப்பொழுது தான் படித்த பாடத்தை நினைத்து வைத்துக் கொள்வதற்கு உதவும். இன்று வெளியில் செல்லும்பொழுது நீங்கள் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 6 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் வெளிர் நீல நிறம்

மீனம் ராசி அன்பர்களே..!! இன்று பிரச்சனைகளை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதுமட்டுமில்லாமல் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். புதிய பணிகளை பின்னொரு அனுகூல நாளில் துவங்கலாம். இன்று கொஞ்சம் பொறுமையை மட்டும் கையாளுங்கள். தொழில் வியாபாரத்தை பொருத்தவரை ஓரளவு சிறப்பாக இருக்கும். சேமிப்பு பணம் இன்றைக்கு செலவுக்கு பயன்படும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை கொஞ்சம் உதவும். இன்று குடும்பத்தில் இருப்பவருடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.

கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் இருக்கட்டும். அக்கம்பக்கத்தினருடன் சில்லரை சண்டைகள் கொஞ்சம் ஏற்படக்கூடிய சூழல் இருக்கும். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை  தயவு செய்து தவிர்த்து விடுங்கள். பஞ்சாயத்துக்கள் ஏதும் பண்ணாதீர்கள். தெய்வீக பக்தி இன்று கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவார்கள். வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். மேலதிகாரியுடன் இன்று நீங்கள் இணக்கமாகப் பழகுவீர்கள்.

இன்று மாணவக் கண்மணிகள் நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை அனுபவிக்க கூடும். கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். விளையாட்டுத் துறையிலும் ஆர்வம் அதிகரிக்கும். சக மாணவரிடம் ஒத்துழைப்புடன் நடந்துக் கொள்வீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்ககூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |