Categories
தேசிய செய்திகள்

அது எப்படி…? பரோட்டாவும், சப்பாத்தியும் ஒன்னு கிடையாது…. 18% ஜிஎஸ்டி கட்டாயம்…. பரபரப்பு உத்தரவு…..!!!!

குஜராத் மாநிலத்தில் உள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் பரோட்டா உற்பத்தி செய்யும் நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பரோட்டாக்கள் மீதான ஜிஎஸ்டி விகிதம் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் கூறப்பட்டதாவது, வெந்தய பரோட்டா, முள்ளங்கி பரோட்டா, ஆலு பரோட்டா, வெங்காய பரோட்டா, மிக்ஸட் வெஜிடபிள் பரோட்டா, மலபார்‌ பரோட்டோ, சாதாரண பரோட்டா என 8 வகைகளில் தயார் செய்யப்படுகிறது. இந்த பரோட்டாக்களை வாடிக்கையாளர்கள் வாங்கும் போது 3 முதல் 4 நிமிடங்கள் சூடு பண்ணால் சாப்பிடுவதற்கு ரெடியாகிவிடும்.

பரோட்டா தயார் செய்வதற்கு கோதுமை மாவு, உருளைக்கிழங்கு, முள்ளங்கி, காய்கறிகள், வெந்தயம், வெங்காயம் போன்றவைகள் பயன்படுத்தப்படுகிறது. அதோடு பரோட்டா என்பது சப்பாத்தி மற்றும் ரொட்டி போன்றவைகளுடன் சேர்ந்தது தான். எனவே சப்பாத்தி, பீட்சாவுக்கு பயன்படுத்தப்படும் பிரட்  போன்றவைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது போன்று பரோட்டாவுக்கும் 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும் என கூறப்பட்டது.

இதற்கு நீதிபதி சப்பாத்தி மற்றும் ரொட்டி தயார் செய்வதற்கு கோதுமை மாவு மற்றும் தண்ணீர் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பரோட்டா தயார் செய்வதற்கு கோதுமை மாவு, காய்கறிகள், எண்ணெய், உப்பு, வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் முள்ளங்கி போன்றவைகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே ரொட்டி, சப்பாத்தியுடன் பரோட்டாவை ஒப்பிட முடியாது. எனவே பரோட்டாவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.

Categories

Tech |