இந்திய அரசின் பாஜக ஆட்சி மீது பெரும் கரும்புள்ளியாக அமைந்தத ரபேல் விமானம் தீர்ப்பு சீராய்வு மனு மீதான விசாரணை தீர்ப்பை இன்று ( 14/11 )உச்சநீதிமன்றம் வழங்குகின்றது.
ரபேல் விமானம் : என்ன தேவை ?
இந்தியா கடைசியாக வாங்கியது சுகோய் விமானம். ரஷ்யாவிடமிருந்து 1996_ல் வாங்கியது தான் கடைசி. அதன் பிறகு போர் விமானங்களே வாங்கவில்லை. உள்நாட்டிலேயே போர் விமானம் தயாரிப்பது என்னும் திட்டப்படி , 2001-இல் தேஜஸ் எனப்படும் இலகு ரகப் போர் விமானம் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது. ஆனால் உற்பத்தியில் தாமதமாகி 2016-இல் தான் விமானப்படையில் சேர்க்கப்பட்டது.
இதற்கிடையில் போர் விமானங்களின் தேவை உணரப்பட்டதால் புதிய போர் விமானங்கள் வாங்க முடிவு எடுக்கப்பட்டது. மன்மோகன் சிங் ஆட்சியில் , 2009-ல் 126 பல்நோக்கு போர் விமானங்கள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டது. அதில் பங்கேற்ற பல நாட்டு நிறுவனத்தின் பல்வேறு பரிசீலனைக்குப் பிறகு பிரான்ஸ் நாட்டின் தஸ்ஸோ நிறுவனத்தில் ரபேல் விமானங்களை வாங்க முடிவு எடுக்கப்பட்டது.
126 ஜெட் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவது. இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்கு தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை தஸ்ஸோ நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் ( ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் ) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது.
ஹெச்.ஏ.எல் ( ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் ) :
2014 மே மாதம் மோடி அரசு ஆட்சிக்கு வருகிறது. 2015 ஏப்ரல் பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார். முன்பு எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப் போவதாக அறிவிக்கிறார்.அடுத்து , 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதியாகி விட்டது என்கிறார். அன்றைக்கு பாதுகாப்பு துறைக்கு பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர். அடுத்து 2016 செப்டம்பரில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது .
இதை ஏன் ஊழல் என்கிறார்கள் ?
தொழில்நுட்பம் :
முந்தைய ஒப்பந்தத்தில் , தஸ்ஸோ நிறுவனம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்.ஏ.எல் நிறுவனத்துக்கு தொழில்நுட்ப ஒத்துழைப்பு வழங்கும். இன்றைய ஒப்பந்தத்தில் சில தனியார் நிறுவனங்களுக்கும் தொழில்நுட்பம் தரப்படும். அந்த தனியார் நிறுவனம் எது ? அதுதான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ்
2015ல் பிரான்சுக்கு சென்றபோது ரபேல் விமானங்களை வாங்குவதாக தடாலடியாக அறிவித்தார் மோடி. இது போன்ற பல்லாயிரம் கோடி ஆயுதங்கள் வாங்கும் விஷயத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு , டெண்டர் , தொழில்நுட்பக் குழு , மதிப்பீடு , பரிசீலனை என எதுவுமே இல்லாமல் தன்னிச்சையாக முடிவு அறிவிக்கப்பட்டது.இது போன்ற விஷயங்களில் போர் விமானம் குறித்த தொழில்நுட்பம்தான் ரகசியமே தவிர விலை ரகசியமாக வைக்க தேவையில்லை. ஆனால் மோடி அரசு விலையை ரகசியம் என்கிறது.
சந்தேக ரிலையன்ஸ் :
2015 ஏப்ரலில் பிரான்ஸ் சென்ற மோடி ரபேல் விமானம் வாங்கப்படும் என்று அறிவித்தார் அல்லவா , அப்போது கூடவே சென்றவர் அணில் அம்பானி. இந்த பயணத்துக்கு சில நாட்கள் முன்புதான் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் எனும் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது.பிரதமர் பிரான்சுக்கு சென்று ரபேல் வாங்குவதென அறிவித்தற்கு இரண்டு நாட்கள் முன்பு கூட , போர் விமானங்கள் விஷயத்தில் ஹெச்.ஏ.எல் இருக்கிறது என்று பேட்டி அளித்திருக்கிறார் வெளியுறவுத்துறை செயலாளர். இந்த பின்னணியில்தான் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் வந்ததை கேள்விக்குள்ளாக்குகிறன எதிர்க்கட்சிகள் .