Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

பீட்ரூட் குருமா செய்வது எப்படி …

பீட்ரூட் குருமா
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் –  2
வெங்காயம் –  1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல் – 2 மேஜை கரண்டி
மிளகாய் – 3
கசகசா – 1/2 தேக்கரண்டி
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
beetroot kurmaக்கான பட முடிவுகள்
செய்முறை:
கடாயில்  எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு, ஏலக்காய் , வெங்காயம் , இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி பின் தக்காளி , பீட்ரூட் மற்றும்  தண்ணீர் சேர்த்து வேக விடவும். தேங்காய் துருவல், மிளகாய் மற்றும் கசகசா சேர்த்து அரைத்துக் கொள்ளவும் . பீட்ரூட் வெந்ததும் அதனுடன் அரைத்ததை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் பீட்ரூட் குருமா ரெடி!!!

Categories

Tech |