Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ.696,00,00,000 எப்படி வந்துச்சு ? 1சிலிண்டர் வாங்க முடியுமா ? ரூ.150 கம்மியா இருக்கு…!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தில் நான் ஒன்னு கேட்குறேன், ஏன் பிள்ளைங்க எங்க படிக்குதுன்னு நினைக்கிறீங்க ? அரசு பள்ளியில் படித்த பிள்ளைகள், அரசு கல்லூரி, எந்த கல்லூரியில்  படித்தாலும் ஆயிரம் ரூபாய் ? எவ்வளவு காசு கட்டிப்படிக்குதுன்னு நினைக்கிறீங்க ? என் பிள்ளைங்க கட்டணம் கட்டுகிறார்கள் அல்லவா ?அந்த கல்வியை நீங்க தரமாக கொடுங்கன்னு சொல்லுறோம்.

புதுமைப்பெண் என்றால் என்ன ? எங்களுக்கு படிக்க காசு இல்ல, வறுமையில் இருக்கிறோம். எங்க அம்மா, அப்பாவுக்கு வருமானம் இல்ல. அப்படின்னு கையேந்த வைக்கிறது புதுமை இல்ல. கல்வி கற்று, கல்விக்கு ஏற்ற வேலையை பெற்று,  அதன் மூலம் சம்பாத்தியத்தை பெற்று,  அண்ணனைச் சார்ந்து, கணவனைச் சார்ந்து, பெற்றோரைச் சார்ந்து, இல்லாது,  தன் கால்களிளே இன்றைய தலைமுறை பெண் பிள்ளைகள் நின்னு, உழைக்கின்ற, வாழுகின்ற அந்த நிலையை பெறுவதற்கு பெயர் தான் புதுமை. அதுதான் பாரதி கண்டது.

நீங்க அத விட்டுட்டு,  எங்களுக்குன்னு கஷ்டம் என கையேந்துற நிலைமையில் எங்க பிள்ளைகளை வச்சுட்டு,  அதை புதுமைன்னு சொல்றதை எப்படி ஏற்பது ? குடும்ப தலைவிகளுக்கு காசு கொடுக்க முடியல. ஆயிரம் ரூபாய் கொடுக்குறேன்னு சொன்னீங்க.  அப்போது நீங்க என்ன சாக்கு சொன்னீங்க ? நிதி வலிமை இல்ல. அவ்வளவு  பொருளாதாரப் பெருக்கம் இல்லை. நிதி ஆதாரம் இல்லை.  அதனால கொடுக்க முடியலன்னு சொன்னீங்க.

இதுக்கு எப்படி 696 கோடி வந்துச்சு ? எப்படி வந்துச்சு ? யாரு கேட்டா  எங்க பிள்ளைகள் எல்லாம்,  எங்களுக்கு படிக்க போறோம் ஆயிரம் ரூபாய் கொடுங்கன்னு சொன்னாங்களா ? இல்ல. அந்த கல்வியின் தரத்தை உயர்த்தி அதை  இலவசமாக குடுங்க. அதுக்கு நாங்க பணம் கட்டி படிக்கிறோம். இந்த 1000 ரூபாயை வச்சு ஒரு சிலிண்டர் வாங்க முடியுமா ? என்ன 150 ரூபாய் குறையுது என தெரிவித்தார்.

Categories

Tech |