திருவாரூர் மாவட்டத்தில் கொட்டகை திடீரென தீப்பிடித்து எறிந்ததில் 2 லட்சம் மதிப்புள்ள வேளாண் கருவி மற்றும் விதை நெல்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள கோமல் பகுதியில் உள்ள ஆதனூரில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான இவர் வீட்டிற்கு அருகே உள்ள கொட்டகையில் குருவை சாகுபடி செய்வதற்காக 20 மூட்டை விதை நெல் வைத்திருந்துள்ளார். இதனையடுத்து அங்கு பம்புசெட் மற்றும் 2 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் இருந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த கொட்டகை குடிசையில் அமைக்கப்பட்டுள்ளதால் நேற்று மதியம் அங்கு தீடிரென தீ பிடித்துள்ளது.
இந்த விபத்தில் உள்ளே இருந்த வேளாண் கருவி விதை நெல் அனைத்தும் எரிந்து தீயில் கருகியது. இதனை பார்த்த விவசாயி சக்திவேல் அதிர்ச்சியடைந்து ஆலிவலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையறிந்த அந்த தொகுதி எம்.எல்.ஏ மாரிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் பாஸ்கர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளனர். மேலும் விவசாயிக்கு விதை நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ உறுதியளித்த நிலையில் தீ பற்றியதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.