காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். ராகுல் காந்தி டிசம்பர் 25-ஆம் தேதி முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை நடைபயணத்துக்கு இடைவெளி விட்டிருக்கும் நிலையில், ஜனவரி 3-ஆம் தேதி நடை பயணமானது ஸ்ரீ நகரில் நிறைவு பெறும். இந்நிலையில் ராகுல் காந்தி நடைபயணத்தின் போது வெறும் வெள்ளை நிற டி-ஷர்ட் மற்றும் அணிந்து இருப்பார். ஆனால் ராகுலுடன் நடந்த மற்றவர்கள் குளிரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான ஆடைகளை அணிந்திருந்தார்கள்.
ஆனால் ராகுல் மட்டும் வெறும் டீ-ஷர்ட் அணிந்திருந்ததால் பாஜக கட்சி ராகுல் காந்தி விலை உயர்ந்த டி ஷர்ட் அணிந்திருப்பதாக குற்றம் சாட்டியது. கடந்த செப்டம்பர் மாதம் பாஜக தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி அணிந்திருக்கும் டி-ஷர்ட் இன் விலை 41,257 ரூபாய் என பதிவு செய்திருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்ததோடு ராகுல் காந்தியும் சாதாரண டி ஷர்ட் அணிய ஆரம்பித்தார். இந்நிலையில் ராகுல் காந்தியின் டீ-ஷர்ட் விவகாரம் மீண்டும் பூதாகரமாக வெடித்துள்ளது. அதாவது ராகுல் காந்தியுடன் செல்லும் மற்றவர்களுக்கு எல்லாம் குளிரும் போது ராகுலுக்கு மட்டும் எப்படி குளிர வில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது குறித்து கடந்த 24-ம் தேதி ராகுல் காந்தி பேசியிருந்தார். அவர் என்னிடம் சமூக ஊடகங்களும் பத்திரிக்கையாளர்களும் எப்படி குளிர வில்லை என்று கேட்கிறார்கள். இதே கேள்வியை விவசாயிகளிடமும், கூலித் தொழிலாளிகளிடமும், ஏழ்மை வீட்டில் பிறந்த குழந்தைகளிடமும் கேட்பதில்லை என்று கூறியிருந்தார். இதனால் ஓரளவு டீ-ஷர்ட் விவகாரம் அடங்கிய நிலையில், நேற்று மீண்டும் டி-ஷர்ட் விகாரம் விவாத பொருளாக மாறியுள்ளது.
அதாவது காங்கிரஸ் கட்சியின் 138-வது நினைவு நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களின் நினைவிடங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் குளிரிலிருந்து தங்களை பாதுகாக்கும் ஆடையை அணிந்திருந்தனர். ஆனால் அப்போதும் ராகுல் காந்தி மட்டும் டி-ஷர்டில் வந்திருந்தார். இதனால்தான் டி-ஷர்ட் விவகாரம் வேண்டும் தலைதூக்கியுள்ளது. மேலும் காஷ்மீருக்குள் செல்லும்போது ராகுல் காந்தி டி-ஷர்ட் அணியாமல் குளிரிலிருந்து பாதுகாக்கும் ஆடையை அணிவாரா என்பது தான் தற்போது பலரது கேள்வியாகவும் இருக்கிறது.