Categories
தேசிய செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…! ஆரஞ்சு பழத்தில் இப்படியொரு சம்பவம்….. அதிர்ந்து போன அதிகாரிகள்…!!!!

மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் வஷி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் லாரி ஒன்று சந்தேகப்படும்படியாக சென்று கொண்டிருந்தது. இதைப் பார்த்த வருவாய் நுண்ணறிவு இயக்குனராக அதிகாரிகள் லாரியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின் போது லாரியில் ஆரஞ்சு பழங்களை வைத்து செல்லும் பெட்டிகள் இருந்துள்ளது. இந்த பெட்டிகளை பிரித்துப் பார்த்தபோது அதில் போதைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.

இது மெத்தாம்பொட்டம்மைன் மற்றும் தூய்மையான கொக்கைன்‌ ஆகும். இந்த போதைப் பொருட்கள் சுமார் 9 கிலோ இருந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு ரூ. 1,476 கோடி ஆகும். இந்த போதை பொருட்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளனர். மேலும் லாரி ஓட்டுனரையும் போதை பொருட்களை இறக்குமதி செய்த நபரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |