Categories
மாநில செய்திகள்

வீடு தேடி வரும்…. முருகன் படத்தோடு, “பஞ்சாமிர்தமும் சேர்ந்துவரும்”… ஒப்பந்தம் தயார்…!!!

பக்தர்களுக்கு வீட்டிலேயே பிரசாதம் வரும் வகையில் தபால் மூலம் பஞ்சாமிர்தத்தை அனுப்பி வைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி கோவிலில் பிரசாதம் என்றால் புகழ்பெற்றது பஞ்சாமிர்தம் தான். பழனி கோவிலில் விபூதி, சந்தனம், என பல பிரசாதங்கள் வழங்கப்பட்டாலும் அவற்றில் பிரதானமாக விளங்குவது இந்த பஞ்சாமிர்தம். பழனி கோயில் நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. உலகப் புகழ்பெற்ற பஞ்சாமிர்தம் தற்போது பக்தர்களின் வசதிக்காக தபால் மூலம் விற்பனை செய்ய பழனி கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது .

இதன்படி தபால் துறையில் பேமெண்ட் மூலம் 250 ரூபாய் பணம் செலுத்தி பஞ்சாமிர்தம், விபூதி மற்றும் திரு முருகன் படம் ஆகியவற்றை பக்தர்கள் வீட்டிலேயே பெரும் படி இந்து சமய அறநிலை துறை முடிவு செய்துள்ளது.  பழனி கோயிலுக்கு பக்தர்கள் வருவதில் கட்டுப்பாடுகள் இருந்தால்,  பழனி கோயிலுக்கு வர முடியாத பக்தர்களுக்கு வீடு தேடி வரும் பஞ்சாமிருதம் ஒரு வரப்பிரசாதமாகும்

இதன்படி பிரசாதத்தை வீட்டிற்கே வழங்கும் திட்டம் வரும் திங்கட்கிழமை முதல் தொடங்க உள்ளது. அதற்கான திட்டம் இரண்டு துறைகளின் அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு இன்று துவங்கப்பட்டது. அஞ்சல் துறை மூலமாகவோ அல்லது http://www.tnhrce.gov.in என்ற ஆன்லைன் மூலமாகவோ ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |