கல்பாக்கம் அணு மின் நிலையத்துக்கு சொந்தமான மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் இருந்தும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பது இல்லை என்றும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க பல மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி மற்றும் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சொந்தமாக உள்ள மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிடென்ட் படுக்கைகள் இருந்தும் துறை அலுவலர்கள் ஊழியர்கள் அந்த பகுதி மக்கள் யாருக்கும் அங்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. அவர்கள் வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.