அமெரிக்காவில் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சையின் போது அழுத பெண்ணுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்பட்டது தொடர்பான பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அறுவை சிகிச்சை என்றாலே பொதுவாக அனைவருக்கும் பயம் ஏற்படும். அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்களிடம் நோயாளிகள் சில நேரங்களில் கத்துவது, கையை பிடித்து இழுப்பது, அழுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர். அதேபோல் அமெரிக்காவை சேர்ந்த மிட்ச் எனும் பெண் தனது மச்சத்தை நீக்குவதற்காக மருத்துவமனை ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு மச்சத்தை நீக்குவதற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அப்போது அந்த பெண் அறுவை சிகிச்சையின் போது பயத்தில் உணர்ச்சிவசப்பட்டு அழுதுள்ளார். அதன் பிறகு அறுவை சிகிச்சை முடிந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நேரத்தில் பில் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அந்த பில்லில் அறுவை சிகிச்சையின் போது அழுததற்காக அந்த மருத்துவமனை பிரீஃப் எமோஷன் என்ற பெயரில் 11 டாலர்களை கட்டணமாக வசூலித்துள்ளது.
Mole removal: $223
Crying: extra pic.twitter.com/4FpC3w0cXu— Midge (@mxmclain) September 28, 2021
மேலும் அறுவை சிகிச்சையின் போது அழுததற்கான 11 டாலர்களும், மச்சத்தை நீக்குவதற்கு 223 டாலர்களும் என அந்த பில்லில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே மிட்ச் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு மருத்துவமனை அளித்த பில் கட்டண ரசீதை பகிர்ந்துள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த அழுகை கட்டண விவகாரம் பேசு பொருளாக மாறி வருவது குறிப்பிடதக்கது.