பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத் மருத்துவமனையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு கிட்னி செயலிழந்து விட்டதாகவும் ரத்த அழுத்தம் அதிகரித்து விட்டதாகவும், அவரது உடல் நிலை மோசமடைந்து உள்ளதாகவும், சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75% செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2017-ல் மாட்டுத் தீவன வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனையிலிருந்த லாலுபிரசாத் சிறுநீரக பாதிப்பு காரணமாக ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது 25 சதவீதம் மற்றும் சிறுநீரகம் செயல்படுவதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.