குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
தற்போதைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்று. அதிலும், குழந்தைகள் ஊட்டச் சத்து மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள மாட்டார்கள். காய்கறிகளை கொடுத்தாலும்,
அதை சாப்பிட குழந்தைகள் அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டுமெனில் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை கலந்து திரிகடுகு சூரணத்தை கால் தேக்கரண்டி எடுத்து தேன் கலந்து காலை உணவுக்கு பின் கொடுக்கலாம். இது எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கலாம்.