ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு முன்பு ரத்தக்கறை படிந்து இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த தவிட்டுபாளையம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட வீட்டு வாசலில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் நள்ளிரவு பூஜை செய்த அடையாளம் தெரியாத நபர்கள்,
ஆடு சேவலை பலி கொடுத்து இழுத்துச் சென்ற பொழுது வீதிகளில் ரத்தம் வடிந்து இருக்கலாம் என்று கூறிய அதிகாரிகள், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக குடியிருப்பு பகுதிகளில் ரத்தக்கறை படியச் செய்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரித்தனர். மேலும் கிராம மக்கள் இது பேய் பிசாசு வேலையாக கூட இருக்கலாம் என்று மூட நம்பிகளை நம்பிக்கொண்டு அச்சத்தில் உள்ளனர்.