பலரும் அறிந்திராத சில மருத்துவ குறிப்புகள்
- துளசி இலைச் சாறுடன் கற்கண்டு சேர்த்து மூன்று வேளை தினமும் குடித்து வருவதனால் தொண்டை வலி சரியாகும்.
- மாதுளை இலையை அரைத்து சாறு எடுத்து சில துளிகளை மூக்கில் விட்டால் மூக்கில் இருந்து வடியும் ரத்தம் நின்று விடும்.
- சித்தரத்தை பொடி செய்து பசும்பாலில் சேர்த்து குடித்தாள் மூக்கில் நீர் வடிதல் மற்றும் தும்மல் பிரச்சனை குணமாகும்.
- பூண்டின் தோல் ஓமம் மிளகு இதனை நன்றாக இடித்து நெருப்பில் ஆனால் இட்டு புகைப்பிடிப்பதனால் மூக்கில் நீர்வடிதல் மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
- எலுமிச்சை பழ சாறை சூடாக்கி அதில் சிறிதளவு தேன் கலந்து மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தொண்டை தொடர்பான பிரச்சினைகள் குணமடையும்.
- பச்சை திராட்சை பழத்தின் சாறை வெறும் வயிற்றில் அருந்திவந்தால் வறட்டு இருமல் குணமடையும்.
- எலுமிச்சை பழ சாறு மற்றும் தேன் சம அளவு உட்கொண்டால் சளி இருமல் போன்றவை சரியாகும்.