பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம்
தயிரில் நெய் கலந்து சாப்பிட்டு வந்தால் நரைமுடி கருமையாக மாறும்.
விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.
சுக்கு, மிளகு, திப்பிலி இவை அனைத்தையும் வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.
முற்றிய வெண்டைக்காயை சூப் செய்து குடித்து வந்தால் இருமல் உடனடியாக குணமாகும்.
கோதுமை கஞ்சியை பெண்கள் மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்கியுடன் இருக்கலாம்.
பூண்டு, வெங்காயம் அதிகம் உணவில் சேர்த்து வந்தால் தேவையற்ற கொழுப்பை குறைத்து விடலாம்.
அல்லி இதழ்களை சந்தனத்துடன் சேர்த்து அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் குளித்து வந்தால் முகப்பருக்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
எலுமிச்சை பழத்தின் சாரை ஓரிரு துளிகள் காதில் விட்டால் காதுவலி நீங்கிவிடும்.
குடல்புண் குணமாகவும் வயிற்றுப்புழுக்கள் அழியவும் அகத்திகீரை நல்ல உணவாக இருக்கும்.
தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நுரையீரல் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
அத்திபழம் தினமும் 5 அளவிற்கு சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும்.