வீட்டிலேயே ஒரு சில எளிய மருத்துவங்களை இயற்கையாக மேற் கொள்வது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
சுத்தமான பசும்பாலில் வெண்தாமரை மலர்களைப் போட்டு வெதுவெதுப்பாக காய்ச்சி அதில் வரும் ஆவியை கண்ணில் விட்டால் கண் தொடர்பான நோய்கள் அதிக அளவில் குணமாக வாய்ப்புண்டு.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் கடுக்காய் பொடியை வெந்நீரில் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் பருகினால் உடனடியாக வயிறு சுத்தமாகும்.
பெரும்பாலானோர் தற்போது அவதிப்படும் ஒரு பிரச்சனை உடல் சூடு. வெயில் காலம் நெருங்க நெருங்க உடல் சூட்டால் பலரும் அவதிப்படுவதாக வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து ஆனந்த குளியல் மேற்கொண்டால் உடல் சூடு குறையும்.