டெல்லி மாநிலத்தில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு நாங்கள் தடை விதிக்கவில்லை என்று மத்திய அரசு கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லியில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்களை மக்களுக்கு வழங்கும் திட்டம் தொடங்க உள்ளதாக தெரிவித்தார். ஆனால் ஆளுநர் இரண்டு காரணங்களை சுட்டிக்காட்டி இந்த திட்டத்தை அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறார் எனவும் கூறியுள்ளார். அதில் முதலாவது இந்த திட்டத்திற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இரண்டாவது இந்த வழக்கு பற்றிய விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளதாக கூறினார். இந்நிலையில் டெல்லியில் மக்களுக்கு வீடுகளுக்குச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. டெல்லிக்கு கூடுதல் ரேஷன் பொருட்களை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது என மத்திய நுகர்வோர் விவகாரம் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.