பெரம்பலூரில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், குழந்தை இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பட்டி சேர்ந்தவர் அழகம்மாள் விஜயவர்மன் தம்பதியினர். இதில் அழகம்மாள் பிஎஸ்சி நர்சிங் படித்து முடித்துள்ளார். விஜய வர்மனின் அண்ணன் அக்குப்பிரசர் மருத்துவம் பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கருவுற்றிருந்தார். இவருக்கு வீட்டிலேயே பிரசவம் பார்க்க வேண்டும் என கணவன் வீட்டில் உள்ளவர்கள் வற்புறுத்தியுள்ளனர். இதற்கு அழகம்மாலும் சம்மதித்துள்ளனர். இதை அறிந்த சுகாதாரத் துறை அலுவலர்கள் கடந்த ஜூன் மாதம் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர்.
பல முறை வீட்டிற்கு வந்து மருத்துவமனைக்கு வர வற்புறுத்தி இருந்தும், அவர்கள் மருத்துவமனைக்கு செல்ல மறுப்பு தெரிவித்தனர். மேலும் பிரசவத்தின் போது அழகம்மாலுக்கும், குழந்தைக்கும் ஆபத்து ஏற்பட்டால் மருத்துவமனை பொறுப்பேற்காது எனவும் கைப்பட கடிதம் எழுதிக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவில் அழகம்மாலுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது குழந்தை பாதி வெளியே வந்த நிலையில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, ஆம்புலன்சை வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
செல்லும் வழியிலேயே அழகம்மாள் உயிரிழந்தார். மேலும் குழந்தை மருத்துவமனையில் அழுகிய நிலையில் வெளியே எடுத்துள்ளனர். இதையடுத்து ஆம்பூர் காவல் அதிகாரிகள் விஜயவர்மன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.