Categories
உலக செய்திகள்

103 வயதில் ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் மறைவு.!

75 படங்கள், 92 நடிப்புக்கான அங்கீகாரம் என சூப்பர்ஸ்டார் என்ற பெயர் வருவதற்கு முன் சிறந்த நட்சத்திரமாக ஜொலித்தவர் கிர்க் டக்ளஸ், தனது இறுதி மூச்சை விடுத்து இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

 ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் கிர்க் டக்ளஸ் உடல்நலக்குறைவால் மறைந்தார். அவருக்கு வயது 103. சூப்பர்ஸ்டார் என்ற பெயர் வழக்கில் வருவதற்கு முன்பே நட்சத்திர நடிகராக ஜொலித்த கிர்க் டக்ளஸ் உடல்நலக்குறைவால் புதன்கிழமை காலமானார். இவரது மறைவை நடிகரும், கிர்க் டக்ளஸின் மகனுமான மைக்கேல் டக்ளஸ் அறிவித்தார்.

Image result for kirk douglas

கிர்க் டக்ளல் மறைவு செய்தி குறித்து மைக்கேல் டக்ளஸ் கூறியதாவது: கிர்க் டக்ளஸ் 103 வயதில் நம்மை விட்டு பிரிந்துவிட்டார் என்பதை நானும் எனது சகோதரர்களும் சேர்ந்து அறிவிக்கிறோம். உலகத்தைப் பொறுத்தவரை அவர் திரையுலகத்தின் பொற்காலங்களில் சிறந்த படங்களில் நடித்த நடிகர். மனிதநேயத்துடனும், நியாயமான விஷயங்களுக்காகவும் தன்னை அர்பணித்தவர்.

ஆனால் எங்களைப் பொறுத்தவரை எளிமையான தந்தை, எனது மனைவிக்கு சிறந்த மாமனார், பேரப்பிள்ளைகளுக்கு அன்பான தாத்தா, மனைவி ஆன்னேவுக்கு அற்புதமான கணவர் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

Image result for kirk douglas

75 திரைப்படங்களில் நடித்துள்ள கிர்க் டக்ளஸ், 92 நடிப்புக்கான அங்கீகாரத்தை தன்னிடம் வைத்துள்ளார். 1950இல் முதல் முறையாக சாம்பியன் என்ற படத்துக்காக சிறந்த நடிகர் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து 1953இல் தி பேட் அண்ட் ப்யூட்டிஃபுல் படத்துக்கும், 1957இல் வெளியான நெதர்லாந்த் ஓவியர் வின்செண்ட் வேன் காக் வாழ்க்கை வரலாறு படமான லஸ்ட் ஃபார் லைஃப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்தார்.

Kirk Douglas died at age of 103

இதைத்தொடர்ந்து திரையுலகில், 50 ஆண்டு காலம் சிறந்த படைப்பு மற்றும் அறநெறியை வெளிப்படுத்தியமைக்காக கெளரவ ஆஸ்கர் விருதைப் பெற்றார். தி ராக்மேன்ஸ் சன் என்ற பெயரில் தனது சுயசரிதை புத்தக்கத்தை எழுதிய கிர்க் டக்ளஸ், ரஷ்யாவைச் சேர்ந்த கல்வியறிவு இல்லாத யூத குடியேறிக்கு தான் பிறந்ததாக குறிப்பிட்டார்.

1946ஆம் ஆண்டு தி ஸ்டேர்ஞ் லவ் என்ற படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கினார் கிர்க். தனது மகன்கள் தன் வழியை பின்தொடர விரும்பாத அவர், எனது மகன் மைக்கேல் நடிகராக ஆவதை விட மற்ற அப்பாக்களைப் போல் மருத்துவராகவோ, வழக்கறிஞராகவோ ஆக வேண்டும் என விரும்பினேன். ஆனால் அவர் சிறந்த நடிகராக மட்டுமில்லாமல் எனக்கு பிடித்த நடிகராகவும் திகழ்கிறார் என்று பேட்டி ஒன்றில் கூறினார்

Categories

Tech |