முன்னணி நடிகர் தனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்திற்கான அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக தனுஷ் கடந்த மாதமே அமெரிக்கா சென்றுவிட்டார். “தி கிரே மேன்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இப்படத்தை இன்பினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ ஆகியோர் இணைந்து இயக்குகின்றனர்.
மேலும் இப்படத்தில் பிரபல நடிகர்களான கிறிஸ் ஈவான்ஸ், லா லா லேண்ட், பர்ஸ்ட்மேன், ரயன் காஸ்லிங் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
இதனை இப்படத்தை இயக்கும் ரூஸோ சகோதரர்கள் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளனர். மேலும் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படம் வரும் 2022 ஆம் ஆண்டு ஓடிடியில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.