ஹாலிவுட் நடிகை லீ ஃபியெரோ (Lee Fierro) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த வைரசால் பிரபலங்கள் சிலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் 1975 மற்றும் 1987 ஆம் ஆண்டுகளில் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் ‘ஜாஸ்’ (“Jaws,”) திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 91 வயதான லீ ஃபியெரோ என்பவர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தார்.
இவர் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் சினிமா பட்டறையில் இயக்குனராகவும் ஆலோசகராகவும் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஓஹியோவில் வசித்து வந்த ஃபியெரோ கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.