இன்று நாம் வீடுகளில் நிம்மதியாக வாழ்ந்து வருகிறோம் என்றால், அதற்கு காவல்துறையினரின் பங்கு பெரும்பங்கு. அரசு ஊழியர்களாக ஒரு நாள் கூட விடுமுறை இல்லாமல் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர். இரவு பகலாக மக்களை பாதுகாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் காவலர்களுக்கும் வார விடுமுறை வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர். பல மாநிலங்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழகத்திலும் இந்த கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது ஒரு உத்தரவு இதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக போலீசாருக்கு வார விடுமுறை வழங்குமாறு தமிழக காவல்துறை சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்குமார் தாஸ் உத்தரவிட்டுள்ளார். காவலர்களின் பணிச் சுமையைக் குறைக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் வாராந்திர விடுமுறை உதவும் என்றும் தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் காவலர் மரணத்தை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், காவலர்களுக்கு கவுன்சிலிங் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.