Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

Breaking: 13 மாவட்டத்துக்கு விடுமுறை – முதல்வர் அதிரடி அறிவிப்பு …!!

நிவர் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார்.

நிவர் புயலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து நிறுத்தம், ரயில்கள் ரத்து போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை என்று முதல் அமைச்சர் அறிவித்திருந்தார்.

புயலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்க கூடிய 13 மாவட்டங்களான கடலூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய 13 மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. நிவர் புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக விடுமுறை என முதலமைச்சர் கூறியிருக்கிறார்

Categories

Tech |