Categories
உலக செய்திகள்

ஹோலி பண்டிகைக்கு …டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்த …கமலா ஹாரிஸ் …!!!

இந்திய மக்கள் அனைவருக்கும் ,ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை அமெரிக்க துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ்  தெரிவித்தார்.

இந்தியாவில் தீபாவளி பண்டிகை போன்றே ,ஹோலிப் பண்டிகையும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஹோலி பண்டிகையானது ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் ,அனைத்து மக்களும் ஒன்றுகூடி, மகிழ்ச்சியுடன் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி கொண்டாடுவார்கள். அதன் படி   ஹோலிப் பண்டிகை இன்று (திங்கள் கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஹோலிப் பண்டிகைக்கு உலக நாடுகளிலிருந்து ,அனைத்து தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் அமெரிக்கத் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ், தனது ட்விட்டர் பக்கத்தில் ஹோலிப் பண்டிகை வாழ்த்து தெரிவித்தார். அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பது.’ இனிய ஹோலி பண்டிகை நல்வாழ்த்துக்கள்’. இந்த ஹோலி பண்டிகையன்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக இணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.அனைத்து மக்களும் இந்த மகிழ்ச்சி நிறைந்த நாளில்  வேற்றுமைகளை மறந்து ,ஒற்றுமையுடன் ஒன்றாக இணைந்து கொண்டாடுவது நேர்மறை எண்ணங்கள் கொண்டிருக்கும் , என்று  ஹோலி பண்டிகைக்கு  தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார் .

Categories

Tech |