Categories
தேசிய செய்திகள்

ஹோலி பண்டிகை கொண்டங்களுக்கு …தடை விதித்த …மும்பை மாநகராட்சி …!!!

மும்பையில் இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள  ஹோலி பண்டிகையானது,கொரோனா  தொற்றின் காரணமாக, அம்மாநகராட்சி கொண்டாடுவதற்கு  தடை விதித்துள்ளது. 

மும்பை மாநகரில் தற்போது கொரோனா தொற்றின்  இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் மும்பையில்  தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் வருகின்ற 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் ஹோலி பண்டிகையானது  கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் அனைத்து மக்களும்,ஒரே இடத்தில் ஒன்றாக இணைந்து  ,ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள். ஆனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் அம்மாநகராட்சி ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதைப்பற்றி மும்பை மாநகராட்சி அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டது. அதில் கொரோனா  தொற்றின் காரணமாக வருகின்ற 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஹோலி பண்டிகை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தடை செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பொது இடங்கள் மற்றும் தனியார் இடங்களில் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களை நடத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடையை மீறி செயல்படும் நபர்களை  கொரோனா சட்ட விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதன் காரணமாக அந்த இரண்டு நாட்களில் வெளிமாநிலங்களிலிருந்து விமானங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் வரும் பயணிகளுக்கு கொரோனா  பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |