இயக்குனர் செல்வராகவன் அன்பு குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2003ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் சோனியா அகர்வால் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கொண்டேன். இத்திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். இவர் இயக்கிய முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
இதை தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் இயக்குனர் செல்வராகவன் தற்போது முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அன்பு குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “உண்மையான அன்பு எங்கேயாவது கிடைத்தால் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். வாழ்வில் மிகக் கடினம் அது தான்” என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவை பார்க்கும் ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.
உண்மையான அன்பு எங்கேயாவது கிடைத்தால் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள் ! வாழ்வில் மிகக் கடினம் அதுதான் !
— selvaraghavan (@selvaraghavan) April 21, 2021