Categories
உலக செய்திகள்

தைவானை கடந்த போர்க்கப்பல்…. பின்தொடர்ந்த கடற்படையினர்…. அறிக்கை வெளியிட்ட சீனா ராணுவம்….!!

சீனாவின் வான் மற்றும் கடற்படையினர் போர்க்கப்பலை எச்சரிப்பதற்காக பின்தொடர்ந்துள்ளனர்.

தைவான் எங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று சீனா கூறுகிறது. மேலும் தைவான் ஜலசந்தியின் வழியாக சர்வதேச கப்பல்கள் செல்வதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதிலும் ஐ.நா.சபை வடகொரியாவுக்கு எதிராக வருவாய்த்துறையின் நடவடிக்கையாக பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அதற்காக பிரித்தானியாவின் HMS Richmond என்ற போர்க்கப்பல் சீனாவின் தென்கிழக்கு பகுதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

Image

இந்த நிலையில் HMS Richmond தைவான் ஜலசந்தியை வியட்நாம் செல்லும் வழியில் கடந்துவிட்டது. இதனை HMS Richmond போர்க்கப்பல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து சீனா ராணுவம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” தைவான் வழியாக சென்ற HMS Richmond போர்க்கப்பலை எச்சரிப்பதற்காக சீனாவின் வான் மற்றும் கடற்படை அவர்களை பின்தொடர்ந்துள்ளது.

இது போன்ற பிரித்தானியாவின் கேடு விளைவிக்கும் நோக்கமானது ஜலசந்தியின் அமைதி மற்றும் நடுநிலைத்தன்மையை அச்சறுத்தும் விதமாக அமைந்துள்ளது. இருப்பினும் எங்கள் படைகள் எப்பொழுதும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். குறிப்பாக அனைத்து அச்சுறுத்தல்களையும் எதிர் செயல்பாடுகளையும் எங்கள் ராணுவப்படை சமாளிக்க தயாராக உள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |