ராணுவமே கண்டு அஞ்சிய ஆபத்தான பெண் லியுட்மிலா பாவ்லிசென்கோ பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
லியுட்மிலா பாவ்லிசென்கோ என்ற பெயர் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வரலாற்றில் மிகவும் ஆபத்தான பெண். ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் ராணுவமே இந்த பெண்ணை கண்டு நடுங்கும். இந்தப்பெண் சோவியத் ஒன்றியத்தின் ஹீரோ என அழைக்கப்படுகிறார். இரண்டாம் உலகப் போரின் போது ராணுவத்தில் பெண்கள் இல்லாத காலத்தில் இவர் பணியாற்றி துப்பாக்கி சுடும் வீரராக திகழ்ந்தார். 25 வயதில் தனது துப்பாக்கிச்சூடும் திறமையால் மொத்தம் 350 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. அவர்களில் பெரும்பாலோர் ஹிட்லர் இராணுவத்தை சேர்ந்தவர்கள். அவரின் அசாத்தியமான திறமை பார்த்து அனைவரும் வியந்துள்ளனர்.
அதன் காரணமாகவே இவர் லேடி டெத் என அழைக்கப்படுவார். ஜூலை 12, 1916 ஆம் ஆண்டு ஒரு கிராமத்தில் பிறந்த இவர் 14 வயதில் ஆயுதங்களை கையில் ஏந்தி தனது முதல் சாதனையை தொடங்கினார். ஒரு ஊடக அறிவிப்பின்படி லியுட்மிலா தனது அமெரிக்கப் பயணத்தின் போது: “எனது பக்கத்தில் உள்ள ஒரு சிறு பையன் துப்பாக்கி விடுவதை பார்த்து நான் கற்றுக் கொண்டேன். அதற்காக நான் பெருமை அடைகிறேன் என்று கூறினார். எல்லோரும் சுடும்போது ஒரு பெண்ணும் அதை செய்ய முடியும் என்று முடிவு செய்தேன். இதற்காக கடும் பயிற்சி செய்தேன். இந்த நடைமுறையின் விளைவாக சில நாட்களில் துப்பாக்கி சுடுதலில் லியுட்மிலா மாஸ்டராக உள்ளேன்” என்பது குறிப்பிடத்தக்கது.