Categories
உலக செய்திகள்

2 முறை நின்று போன இதயம்… கோமாவிற்கு சென்ற பின்னரும் கொரோனாவை வென்ற அதிசய நபர்..!!

இரண்டு முறை இதயம் நின்று கோமாவிற்கு சென்ற கொரோனா தொற்று நோயாளி குணமடைந்த அதிசயம் நடந்துள்ளது.

ஏழு வாரங்களுக்கு ஏழு வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரித்தானியர் ஹோவெல் ஸ்காட் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது இதயம் துடிப்பதை இரண்டு முறை நிறுத்தி பின்னர் கோமாவிற்கு சென்று பின்னர் அதிசயமாக மீண்டு வந்துள்ளார். அந்த அதிசய மனிதரை மருத்துவர்கள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அனுப்பும் காட்சி வீடியோவாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதிசயமாக உயிர் பிழைத்த அவரை வீட்டிற்கு அனுப்பும் பொழுது மருத்துவர்கள், செவிலியர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக ஸ்காட்டும் பதிலுக்கு கைத்தட்டி உள்ளது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஏழு வாரங்களுக்கு பிறகு கொரோனா தொற்றிலிருந்து விடுபட்ட ஸ்காட் தனது குடும்பத்தாருடன் இணைந்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் செய்த சேவைக்கு நன்றியுடையவனாக இருப்பேன் என கூறிய ஸ்காட் தனக்காக பிரார்த்தனை செய்தவர்கள் என்னை நினைவு வைத்து குறுஞ்செய்தி அனுப்பியவர்கள் அனைவருக்கும் எனது நன்றி மற்றும்  என்.எச்.எஸ்-க்கு  எனது நன்றி என கூறியுள்ளார்.

Categories

Tech |