Categories
அரசியல்

மோடி வரும்போது இந்துக்கள் அசைவம் உண்ணக்கூடாதா….? இது என்ன புரளி…. விளக்கமளித்த பாஜக….!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தரும்போது, இந்துக்கள், அசைவம் சாப்பிடக்கூடாது என்று எஸ்.ஆர்.சேகர் கூறியதாக வெளியான செய்திக்கு அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறையானது, கோயில்களிலிருந்து வரும் வருமானங்களை வைத்து மீன் சந்தை கட்டப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதனை கடுமையாக எதிர்த்த தமிழ்நாட்டின் பாஜக தலைவரான அண்ணாமலை, மீன் சந்தைகளை அரசாங்கம் கட்டிகொடுக்க வேண்டுமா? அல்லது திருக்கோயில்கள் மூலம் கட்டப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.

ஆனால், அவர், “மீன் சாப்பிடுபவர்கள் எவரும் இந்துக்கள் கிடையாது” என்று கூறியதாக செய்தி வெளியாகி, அது இணையதளங்களில் வைரலானது. இதனை பாஜகவினர் கடுமையாக எதிர்த்தனர். மேலும் இது தொடர்பில், தமிழ்நாட்டின் பாஜக பொருளாளரான எஸ்.ஆர்.சேகர் கூறுகையில், “இல்லாத பொய்களை எல்லாம் அள்ளி விடுவது தான் ஜால்ரா மீடியாக்களின் வேலை.

அண்ணாமலை பேசாததையெல்லாம் பேசியதாக கூறி தலைப்பு செய்தி வெளியிடுகிறார்கள்” என்று தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வரும் 12-ம் தேதி அன்று வருகிறார். தற்போது, “தமிழ்நாட்டிற்கு மோடி வரும் சமயத்தில், இந்து மக்கள் யாரும் அசைவம் உண்ண கூடாது, அப்படி அசைவம் உண்பவர்கள் நாட்டிலிருந்து வெளியேறுங்கள்” என்று எஸ்.ஆர். சேகர் கூறியதாக மற்றுமொரு தகவல் இணையதளங்களில் வைரலாக பரவியது.

இதுபற்றி எஸ் ஆர் சேகர், கூறியிருப்பதாவது, “நான் பேசாததை, நினைத்துக்கூட பார்க்காத ஒரு விஷயத்தை கூறி என்னை பிரபலமாக்க நினைக்கும், என் எதிர்முகாம் தோழர்களுக்கு, நன்றி!  என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |