இந்து சமூகத்தின் பண்டைய மற்றும் புனித தளங்கள் பாகிஸ்தானில் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக டாக்டர் ஷோயிப் சூடில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
பாகிஸ்தான் நீதிமன்றம் சிறுபான்மையினர் உரிமைகள் தொடர்பான தீர்ப்பை மேல் பார்வையிடுவதற்காக கடந்த 2019ஆம் ஆண்டு டாக்டர் ஷோயிப் சூடில் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உள்ளது. இந்நிலையில் டாக்டர் ஷோயிப் சூடில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 5ஆம் தேதி இது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில் பாகிஸ்தான் பகுதியில் அமைந்துள்ள இந்து புனித தளங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவாக்யூ அறக்கட்டளை சொத்து வாரியம் மதிப்புமிக்க சிறுபான்மை இந்து சமூகத்தின் புனித தலங்களை பராமரிக்க தவறிவிட்டது என அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு சிறுபான்மை இந்து சமூகத்தின் பண்டைய மற்றும் புனித தளங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பதாகவும், பாகிஸ்தானில் உள்ள பெரும்பான்மையான இந்து ஆலயங்களை சேதப்படுத்துவது தொடர்ந்து கொண்டே இருப்பதால் அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறும் டாக்டர் ஷோயிப் சூடில் தெரிவித்துள்ளார்.