நாம் அறியாமல் செய்யும் ஆன்மீக தவறுகள் சிலவற்றை பற்றிய தொகுப்பு
- திங்கள் அன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கைகளால் தொடக்கூடாது.
- வீட்டின் வாசலில் கோலம் போடாமலும் வீட்டில் விளக்கு ஏற்றாமலும் எந்த ஒரு ஆலயத்திற்கும் செல்லக்கூடாது.
- விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பொழுது விளக்கில் இருக்கும் நெய் அல்லது எண்ணையை கைகளால் தொடக் கூடாது.
- விளக்கில் இருக்கும் எண்ணெய் கையில் பட்டால் அதனை தலையில் தடவ கூடாது.
- சாமி படங்களில் இருக்கும் மாலை காய்ந்து விட்டால் உடனடியாக அகற்றி விடவேண்டும்.
- விஷ்ணு ஆலயத்திற்கு சென்று வீடு திரும்பும் பொழுது லக்ஷ்மியும் உடன் வருவாள். அதனால் விஷ்ணு ஆலயத்தில் அமரக்கூடாது.
- ஓம், திரிசூலம் மற்றும் ஸ்ரீ சக்கரம் போன்ற சின்னங்களை வாசலின் உள்ளேயோ அல்லது கதவில் ஒட்டி வைப்பது அதிர்ஷ்டத்தை அளிக்கும்.
- முக்கியமான காரியத்திற்காக வெளியில் செல்லும்பொழுது இந்தச் சின்னங்களை சட்டைப் பையில் எடுத்துக் கொண்டு செல்வதால் வெற்றியே கிடைக்கும்.
- வாசலை பார்த்தபடி சிரித்த புத்தரை வைப்தால் வீட்டில் செல்வம் அதிகரிக்கும் அனைத்து செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.