Categories
அரசியல்

வெல்லப்போவது யார்….? நெருங்கி வரும் தேர்தல்…. ஒரே வாக்குறுதிகளை அறிவித்த 2 கட்சிகள்….!!!

ஹிமாச்சல் பிரதேசத்தில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் டிசம்பர் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என தேர்தல் ஆணையம் அறித்துள்ளது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் போட்டியிடுவதால் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 199௦-க்கு பிறகு பாஜக மற்றும் காங்கிரஸ் என மாறி மாறி ஆட்சிக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2௦22 தேர்தலில் காங்கிரஸ்க்கு வெற்றி பெறும் வாய்ப்பு இருக்கிறது என சிலர் பேசினாலும், 2024-லில் பாஜக மக்களவை தேர்தலில் வெற்றிபெற திட்டமிடுவதால் இந்த தேர்தலை அவர்கள் சாதரணமாக விட்டு கொடுக்க மாட்டார்கள் என அரசியல் விமர்சகர்கள் தங்களது கருத்தை கூறியுள்ளனர்.

தற்போது ஹிமாச்சலத்தில் பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களின் பிரச்சனைகள், ஆப்பிள் விவசாயிகளின் கோரிக்கைகள் போன்ற பல்வேறு பிரச்சனைகள் உள்ள நிலையில் இதனை மேம்படுத்தும் வகையில் யாரேனும் திட்டங்கள் கொண்டு வந்தால் அவர்கள் இந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் என பலரும் கூறியுள்ளனர். மேலும் தேர்தல் வாக்குறுதிகளாக வீட்டிற்கு இலவசமாக 300 யூனிட் மின்சாரம், இலவசமாக மொபைல் கிளினிக், 18 முதல் 60 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கு மாதந்தோறும் 1,000 முதல் 1,500 வழங்கப்படும் என ஒரே மாதிரியான சில வாக்குறுதிகளை காங்கிரஸ் மாற்றம் ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

இதனைதொடர்ந்து பா.ஜ.க வளர்ச்சி திட்டங்கள், மின்சார மானியம், பாதுகாப்பு திட்டங்கள், பேருந்து கட்டணத்தில் மகளிருக்கு மானியம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசின் திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து பிரச்சாரம் செய்ய போவதாக கூறப்படுகிறது. மேலும் முதல்வர் வேட்பாளராக பாஜக தற்போதைய ஹிமாச்சலத்தின் முதலமைச்சராக இருக்கும் ஜெய்ராம் தாக்கூரை நிறுத்த போவதாகவும், காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் வீரபத்ர சிங் மனைவி பிரதீபா சிங்கை முன்னிருத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |