Categories
அரசியல்

இமாச்சல பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல்…. பா.ஜ.கவை அதிர செய்த கருத்து கணிப்புகள்…!!!

இமாச்சல பிரதேசத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கருத்துக்கணிப்பு மூலமாக யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

இமாச்சல் பிரதேசத்தில் 68 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 35 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி, ஆட்சி அமைக்கும். இந்நிலையில் தற்போது கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதன்படி, எபிபி-சி ஒட்டர் கருத்து கணிப்பு படி, பாஜகவிற்கு 44.8%, காங்கிரஸ் கட்சிக்கு 44.2%, ஆம் ஆத்மிக்கு 3.3% மற்றும் பிற கட்சிகள் 7.7% வாக்குகளை பெறும் என்று தெரியவந்துள்ளது.

இதனால் அங்கு தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்படுகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் யாரும் பெரும்பான்மை பெறாமல், ஆட்சியை பிடிப்பதில் சிக்கல் உண்டாகும். வெற்றியடைந்த சுயேச்சைகள் அல்லது சிறு கட்சிகளின் உதவியை தேட வேண்டிய நிலை வரும். இதேபோன்று ரிபப்ளிக் டி மார்க் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.

அதில் 45.2% வாக்குகள் பாஜகவும், 40.1% காங்கிரஸ் கட்சியும், 5.1% ஆம் ஆத்மி கட்சியும், 9.1% பிற கட்சியும் பெற்றிருக்கிறது. இதன்படி, பாஜகவிற்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில், 1985 ஆம் ஆண்டிற்கு பின் இமாச்சல் பிரதேசத்தின் சட்டமன்ற தேர்தலில் வரலாறு மாற்றி அமைக்கப்படும். எனினும், டிசம்பர் மாதம் எட்டாம் தேதி அன்று தான்  உண்மையான முடிவுகள் தெரியவரும்.

Categories

Tech |