தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. மேலும் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஒரு சில இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோவை, சென்னை மாவட்டத்தில் அதிக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன்கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.