கரூரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் கரூர் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாட 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும் உதவிகளுக்கு ‘89033 31098’ என்ற வாட்ஸ்அப் எண்ணை அறிமுகம் செய்த அவர் இந்த எண்ணிற்கு HI என்ற ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினால் போதும் என்று தெரிவித்துள்ளார். அல்லது 1098 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் தகவல் தொடர்பான ரகசியம் பாதுகாக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.