செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆர.ராசாவுக்கு ஆதரவாக திமுக பேசாது. ரெட்டமலை சீனிவாசன், அயோத்திதாசரின் பேரன் இன்றும் இருக்கோம், சாகவில்லை. அதனால ஆ ராசாவை அப்படியே விட்டுட்டு போக முடியாது. கவனத்தில் வச்சிக்கிட்டு பேசுங்க. ரொம்ப ஆடாதீங்க, ரொம்ப ஆட்டம் காட்டாதீங்க. என்ன பேச வேண்டும் என்று இருக்கு இல்ல ?
ஏய் இது நீ தான்பா என்னை சொல்லி இருக்க, பிராமணரை தலையில் இரூந்து பிறக்க வைத்தேன், சத்ரியனை தோளிலிருந்து பிறக்க வைத்தேன், வைஷ்ணவனை தொடையில் இருந்து பிறக்க வைத்தேன், சூத்திரனை காலில் இருந்து பிறக்க வைத்தேன் அப்படின்னு எழுதுனது நீதான். சூத்திரன் அப்படி என்றால் ”தாசி மக்கள்” ”வேசி மக்கள்” அப்படி என்று பொருள். ”இழிமக்கள்” என பொருள்.
அதுல பஞ்சமர் என்று ஒன்று வைத்திருக்கிறான். சூத்திரன் காலில் இருந்து பிறக்கின்றார். பஞ்சமர்னு ஒன்னு வச்சிருக்கான், பாரதி கிட்ட போய் கேட்கிறான் இந்த பஞ்சமர் பத்தி… நாம தலையில் இருந்து பிறந்தோம், சத்திரியன் தோளிலிருந்து பிறந்தான், வைஷ்ணவன் தொடையிலிருந்து பிறந்தான், சூத்திரன் காலிலிருந்து பிறந்தான், இந்த பஞ்சமன் எதிலிருந்து பிறந்தான் என்று கேட்டால். அதற்கு பாரதி அவன் ஒருத்தன் தான் ”அவன் ஆத்தாவுக்கும், அப்பனுக்கும்” பிறந்தான் என்று சொல்லிட்டு போய்ட்டான் என தெரிவித்தார்.