Categories
அரசியல் மாநில செய்திகள்

“டேய் அனகோண்டா”…. நான் பாட்டு பாட கூடாதா….? விஷாலின் பேச்சால் கடுப்பான மாஜி அமைச்சர் டி.ஜே….!!!

தமிழக அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் 35-வது அமைச்சராக நேற்று பொறுப்பேற்ற நிலையில் அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், மற்றொருபுறம் வாரிசு அரசியல் என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது. குறிப்பாக அதிமுக மற்றும் பாஜக உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறது.

அந்த வகையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றதால் இனி திரைப்படங்களில் நடிக்க கூடாது என்று கூறினார். இதற்கு நடிகர் விஷால் பதிலடி கொடுத்திருந்தார். அதாவது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திரைப்பட பாடல்களை மேடையில் ஏறி பாடும் போது உதயநிதி மட்டும் நடிக்க கூடாதா என்று விஷால் விமர்சித்து இருந்தார். இதற்கு தற்போது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்து தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஷால் சொன்ன கருத்தை பதிவிட்டு “டேய் அனகோண்டா” என்று கோபத்தோடு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |