அரக்கோணம் இரட்டைக் கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அந்த இடத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யாரும் தவறு இழைத்திருக்கலாம். கொலை செய்தவன் கூட முதலில் தவறு இழைக்காமல் இருந்திருக்கலாம். கொலை செய்யப்பட்டவர்கள் முதலில் தவறை இழைத்திருக்கலாம். ஆனால் உண்மையில் அது அல்ல. என்ன நடந்தது ? என்று நான் நேற்று உடனடியாக களத்திற்கு சென்று மக்களை சந்தித்து பேசும்போது, அறிந்தவற்றை சொல்கிறேன், உண்மையை சொலிகிறேன் இரண்டு மூன்று நாட்களாக தேர்தல் முடிந்து நான் மதுரையில், கடுமையான உடல் நலிவுக்கு ஆளாகி இருந்த என்னுடைய தாயோடு மருத்துவமனையில் இருந்தேன் .சற்று உடல் நலம் தேறி இருக்கிறது.
கொரோனா பிரச்சனை மருத்துவமனையில் வேகமாக பரவுகிறது. எனவே தொடர்ந்து மருத்துவமனையில் வைத்திருக்க வேண்டாம், வீட்டிற்குப் போய் ஓய்வெடுத்து ,ஒரு வாரம் கழித்து வந்து பார்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் சொன்ன அடிப்படையில், அம்மாவை நேற்று இரண்டரை மணிக்கு டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து செல்லுங்கள் என்று சொல்லிவிட்டு ,மருத்துவமனையில் இருந்து அங்கிருந்து நான் விமான நிலையம் சென்று ,மூன்றரை மணி விமானத்தைப் பிடித்து, 7 மணிக்கு நான் அரக்கோணம் போய் சேர்ந்தேன்.
மக்களை சந்தித்தேன், பாதிக்கப்பட்ட அர்ஜுன் குடும்பத்தையும், படுகொலைக்கான சூர்யா குடும்பத்தையும், அந்த கிராமத்தில் உள்ளவர்கள் சந்தித்து பேசினேன். அப்பு என்கின்ற ஐயப்பன் என்கிற ஒரு தம்பி குருராஜ் பேட்டைக்கு ,ஏதோ ஒரு பொருள் வாங்குவதற்காக போயிருக்கிறார் .அவனை என்ன ஊர் ? என்ன சாதி ? என்று கேட்டு வம்பு இழுத்து இருக்கிறது ஒரு கும்பல். அவன் ஊரை சொன்னதும், சாதியை சொன்னதும் அவனை தாக்கத் துவங்கி இருக்கிறார்கள், இதுதான் பிரச்சனை. அவன் ஊர், சாதி என்கிற அடையாளம் என்பது ஏற்கனவே இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கின்றன வெறுப்பின் மூலமாக அமைகிறது.
அந்த வெறுப்பில் இருந்து அது வெடிக்கிறது. பெருமாள்ராஜ் பேட்டை என்று சொல்லி இருந்தால் அவனை அடித்து இருக்க மாட்டார்கள், அவன் ஒரு தலித் குடியிலிருந்து வருகிறான், தலித் என்று தெரிந்ததும், சம்பந்தமில்லாத ஒரு கும்பல் இவரை சுற்றி வளைக்கிறது. அவன் தொலைபேசியில் தன்னுடைய அண்ணனுக்கும், சூர்யாவுக்கும் தகவல் கொடுக்கின்றார். சூர்யா உடன் பிறந்த அண்ணன் அல்ல. பங்காளி சித்தப்பா, பெரியப்பா பிள்ளை. சூர்யா என்பவனும், அப்பு என்பவனும் சித்தப்பா பெரியப்பா பிள்ளைகள் .அப்பு என்பவன் தான் முதலில் சுற்றி வளைக்க படுகிறான்.
அவன் இந்த காலனியைச் சேர்ந்தவன், இந்த கட்சிக்கு ஓட்டு கேட்டவன் என்பதை அடையாளம் கண்டு கொண்டு அவனை தாக்க முயற்சிக்கும் போதுதான், அவன் தன்னுடைய சொந்தக்காரரான அல்லது பங்காளியான ,சித்தப்பா பெரியப்பா என்கிற மகனான சூர்யாவுக்கு தகவல் கொடுக்கிறான். அவன் அங்கே போனதும் அவனை அவர்கள் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அந்த தகவல் கிடைத்து தான் அர்ஜுன் ஓடுகிறான், அர்ஜுனும் அவர்களுடைய சொந்தக்காரர். அர்ஜுன் என்பவன் சோகனுர், சூர்யா என்பவர் செம்பேடு பக்கத்து கிராமம். இரண்டு கிலோ மீட்டர் அளவில் உள்ள பக்கத்து கிராமம். இரண்டு பேருமே உறவுக்காரர்கள் கூட..
ஆகவே இந்த இடத்தை இப்படி தகராறு நடக்கிறது. சாதிவெறியர்கள் சூழ்ந்துகொண்டு சூர்யாவை தாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததும் ,எதர்ச்சியாக எழுந்து பேசிக்கொண்டிருந்த ஐந்து பேர் அந்த இடத்திற்கு ஓடுகிறார். அவன் சோகனூர் என்று தெரிந்த உடன் அவனையும் அவர்கள் சுற்றி வளைத்து, ஒரு இருட்டான பகுதிக்கு கொண்டு போய் அடைத்து கொலை செய்கிறார்கள். இரண்டு தரப்பினர் குடித்துவிட்டு போதையில் இருந்திருந்தால், ஒரு வாக்குவாதம் முற்றி இருந்த நிலையில் கூட ,கொடூரமாக கொலை செய்யக்கூடிய அளவுக்கான தேவை எங்கிருந்து எழும் என திருமாவளவன் விளக்கினார்.