ரசிகர்களுக்கு பிடித்துள்ளது…ஹீரோவா மட்டுமல்ல இப்படியும் நடிப்பேன்..!!
சென்னை- 600028, ஆர்.கே நகர், சுந்தரபாண்டியன் போன்ற பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து. பலரின் பாராட்டுக்களை பெற்ற இனிகோ பிரபாகரன் விரைவில் 2 புதிய படங்களில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எனவே துணை கதாபாத்திரத்தில் நடித்த இனிகோ இப்பொது கதாநாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார்.
இது குறித்து இனிகோ கூறுகையில் “ஆர்.கே நகர் திரைப்படத்தில் வில்லனாக நடித்தேன். அந்த பாத்திரம் ரசிகர்களையும் என்னையும் பெரிதும் கவர்ந்துள்ளது. மேலும் கதைக்கு ஏற்றார்போல் நடிப்பது ரசிகர்களுக்கும் பிடித்துள்ளது. எனவே நாயகனாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் நடிக்க தயார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.