Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோ கேட்டா ஒத்துக்கிறாங்க… நாங்க கேட்டா பிரச்சனை வருது… நடிகை சமந்தா வருத்தம்…!!

நடிகைகளுக்கு சம்பளம் குறைவாக தரப்படுகிறது என்று சமந்தா வருத்தத்துடன்  தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான தெறி, அஞ்சான், கத்தி, உள்ளிட்ட மெஹா ஹிட் படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. இவர் நடிகைகளுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவாக கொடுக்கப்படுகிறது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, “நடிகைகளுக்கு சம்பளம் குறைவாகவே தரப்படுகிறது.

சினிமாவில் முதல் மூன்று இடங்களில் உள்ள கதாநாயகிகளில் ஒருவர் வாங்கும் சம்பளம் 20 முன்னணி கதாநாயகர்களின் பட்டியலில் அவர்கள் வாங்கும் சம்பளத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நடிகையின் சம்பளம் குறைவாகவே உள்ளது.

நடிகைகள் தங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று கேட்டால் பிரச்சனை வருகிறது. ஆனால் நடிகர்கள் கேட்டால் அது உணரப்படுகிறது” என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |