அமெரிக்காவில் திருடன் ஒருவனை சாலையில் சென்ற இளைஞர் டிராலி தள்ளுவண்டியை மோதச் செய்து போலீஸாரிடம் பிடித்து கொடுக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் பீச்ட்ரீ (Peachtree )நகரில் உள்ள ஒரு கடையில் முகமூடி அணிந்திருந்த நபர் ஒருவர் திருடிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தார். அவரை போலீசார் விரட்டி கொண்டு வந்தனர்.
அப்போது சாலையில் ஒரு இளைஞன் டிராலி வண்டியை பொருள்களுடன் தள்ளிக் கொண்டு சென்று கொண்டிருந்தான்.போலீசார் பிடிக்க துரத்தி வருவதை பார்த்த அந்த இளைஞன் திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் திருடன் மீது டிராலியை தள்ளி விட்டு மோதச் செய்தார்.
இதில் திருடன் நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டான். இதையடுத்து பின்னால் துரத்தி வந்த போலீஸார் அவனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். திருடனை பிடிக்க உதவிய அந்த இளைஞருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.