பெற்ற மகளை தந்தை ஒருவர் பாலியல் பலாத்கார செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் குருக்ரம் என்ற பகுதியில் 22 வயதுடைய பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண் தற்போது ஊரடங்கு என்பதால் வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார். வீட்டிலும் பண கஷ்டம் இருந்து வந்த காரணத்தினால் எப்படியாவது ஏதாவது ஒரு வேலைக்கு சேர்ந்து விட வேண்டுமென்று பல நிறுவனத்திற்கு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் கடந்த 7ஆம் தேதி பெண்ணின் தந்தை வேலைக்காக நேர்முகத்தேர்வு நடைபெறுவதாகக் கூறி டெல்லியில் ஒரு ஓட்டலுக்கு மகளை அழைத்துள்ளார்.
ஊரடங்கு காரணமாக நிறுவனம் இந்த ஓட்டலில் நேர்முகத்தேர்வு நடத்துகிறது என்று கூறி மகளை நம்ப வைத்துள்ளார். பின்னர் தந்தை மகளை அந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஒரு நாள் வாடகை எடுத்து அந்தப் பெண்ணே அங்கு தங்க வைத்துள்ளார். உள்ளே சென்றதும் அந்த பெண்ணின் கை கால்களை கட்டி விட்டு டேப்பை வைத்து அந்தப் பெண்ணின் வாயில் ஒட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையடுத்து இந்த சம்பவத்தை தாயிடம் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இருப்பினும் தன் தாயிடம் எப்படியாவது கூறிவிட வேண்டும் என்று நினைத்து தந்தை இல்லாத நேரம் பார்த்து வீட்டில் தனியாக இருந்த தாயிடம் நடந்த சம்பவம் அனைத்தையும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் அருகில் உள்ள காவல் நிலையத்தில் அந்த பெண்ணை அழைத்துச் சென்று புகார் அளித்துள்ளார். பின்னர் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.