மதுரை அரசடி பகுதியில் உள்ள இறையியல் கல்லூரியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு கேக் வெட்டி கிறிஸ்துமஸை கொண்டாடினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம் டிடிவி தினகரன் பேசினார். அவர் பேசியதாவது, சிலர் மதத்தின் பெயரில் மக்களை பிரித்து பிரிவினை வாதத்தை ஏற்படுத்துகிறார்கள். மதத்தின் அடிப்படையில் மக்களை பிரித்து இன்று தீவிரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்தும் வகையில் இருக்கிறது. அதன்பிறகு சிறுபான்மை மற்றும் பெரும்பான்மை என கூறி தேர்தல் நேரத்தில் லாபம் பார்க்கிறார்கள். இந்தியா அமைதி பூங்காவாக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.
அதன் பிறகு தமிழ், சமூக நீதி, சமத்துவம் என்ற பெயரில் பிரிவினையை உருவாக்கி தாத்தா முதல் கொள்ளுப்பேரன் வரை பரம்பரையாக ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். தேர்தல் சமயத்தில் சிறுபான்மை, பெரும்பான்மை என்று கூறி நம்மை ஏமாற்றுவார்கள். ஆன்மீகத்தில் இருப்பவர்கள் யாரையும் அழிக்க நினைக்க மாட்டார்கள். அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். மார்கழி மாதத்தில் தான் கிறிஸ்து ஆண்டவர் பிறந்தார். அதன் பிறகு பகவத் கீதை மற்றும் குர்ஆனுக்கும் இடையேயும் வேற்றுமை கிடையாது. மதம் என்பது அன்பையும் மனித சமூகத்தையும் எடுத்துரைப்பது தான். மேலும் தமிழகம் எப்போதும் அமைதிப் பூங்காவாக இருக்க வேண்டும் என்று உறுதி ஏற்போம் என்று கூறினார்.